நூற்பாக்கள் · 98
- 785உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
- 786வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
- 787அவைதாம்,
- 788உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்.
- 789குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.
- 790சல்லல் இன்னல் இன்னாமையே.
- 791மல்லல் வளனே ஏ பெற்று ஆகும்.
- 792உகப்பே உயர்தல் உவப்பே உவகை.
- 793பயப்பே பயன் ஆம்.
- 794பசப்பு நிறன் ஆகும்.
- 795இயைபே புணர்ச்சி.
- 796இசைப்பு இசை ஆகும்.
- 797அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி.
- 798மழவும் குழவும் இளமைப் பொருள.
- 799சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே.
- 800கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.
- 801கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.
- 802அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.
- 803வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
- 804தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும்.
- 805கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.
- 806தடவும் கயவும் நளியும் பெருமை.
- 807அவற்றுள்,
- 808கய என் கிளவி மென்மையும் செய்யும்.
- 809நளி என் கிளவி செறிவும் ஆகும்.
- 810பழுது பயம் இன்றே.
- 811சாயல் மென்மை.
- 812முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே.
- 813வம்பு நிலை இன்மை.
- 814மாதர் காதல்.
- 815நம்பும் மேவும் நசை ஆகும்மே.
- 816ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
- 817புலம்பே தனிமை.
- 818துவன்று நிறைவு ஆகும்.
- 819முரஞ்சல் முதிர்வே.
- 820வெம்மை வேண்டல்.
- 821பொற்பே பொலிவு.
- 822வறிது சிறிது ஆகும்.
- 823எற்றம் நினைவும் துணிவும் ஆகும்.
- 824பிணையும் பேணும் பெட்பின் பொருள.
- 825பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.
- 826படரே உள்ளல் செலவும் ஆகும்.
- 827பையுளும் சிறுமையும் நோயின் பொருள.
- 828எய்யாமையே அறியாமையே.
- 829நன்று பெரிது ஆகும்.
- 830தாவே வலியும் வருத்தமும் ஆகும்
- 831தெவுக் கொளல் பொருட்டே.
- 832தெவ்வுப் பகை ஆகும்.
- 833விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.
- 834அவற்றுள்,
- 835கம்பலை சும்மை கலியே அழுங்கல்
- 836அவற்றுள்,
- 837கழும் என் கிளவி மயக்கம் செய்யும்.
- 838செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.
- 839விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.
- 840கருவி தொகுதி.
- 841கம நிறைந்து இயலும்.
- 842அரியே ஐம்மை.
- 843கவவு அகத்திடுமே.
- 844துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
- 845அவற்றுள்,
- 846இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை.
- 847ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள.
- 848கவர்வு விருப்பு ஆகும்.
- 849சேரே திரட்சி.
- 850வியல் என் கிளவி அகலப் பொருட்டே.
- 851பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி
- 852வய வலி ஆகும்.
- 853வாள் ஒளி ஆகும்.
- 854துய என் கிளவி அறிவின் திரிபே.
- 855உயாவே உயங்கல்.
- 856உசாவே சூழ்ச்சி.
- 857வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம்.
- 858கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.
- 859நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப.
- 860நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.
- 861புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே.
- 862நனவே களனும் அகலமும் செய்யும்.
- 863மதவே மடனும் வலியும் ஆகும்.
- 864மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.
- 865புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி.
- 866அமர்தல் மேவல்.
- 867யாணுக் கவின் ஆம்.
- 868பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.
- 869கடி என் கிளவி
- 870ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.
- 871ஐ வியப்பு ஆகும்.
- 872முனைவு முனிவு ஆகும்.
- 873வையே கூர்மை.
- 874எறுழ் வலி ஆகும்.
- 875மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
- 876கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
- 877பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே
- 878பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்.
- 879உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.
- 880மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
- 881எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே
- 882அன்ன பிறவும் கிளந்த அல்ல