பாடல் 49 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 49

வித்தகர் கருத்துட் பத்தி பாயநீலம் பழுத்த கோல மேனிகாற்கடன் முகந்த சூற்புய லென்றுகதிரிளங் கொங்கைச் சதிரிள மங்கையர்இயலுறு கலாப மயினட மாடக்காயா மலர்விரி காயா வனமெனஅரையர வல்லி வரையர மகளிர்குழலிசை வண்டு குழலிசை பாடஅங்கையிற் றாங்குஞ் சங்கமுந் திகிரியும்புதையிருள் சீக்கு மதிகதிரென்னகவண்கலா லிசைசெய் சிவந்தவாய் மழலைக்கொடிச்சியர் கண்போ லடிக்கடி சுனைதொறும்பதுமச் செங்கா டிதழ்குவிந் தலரஇருவகைக் காந்தமும் பெருமுனி வர்க்குப்புனலும் புகையாக் கனலுங் கொடுப்பவனந்திரி மேதி யினஞ்சொரி தீம்பால்கங்கையிற் பரக்கப் பொங்குதேன் வெள்ளம்சாம்புன தம்போன் மேம்படு சாரல்சோலை மாமலை மேலினி தமர்ந்தோய்அதிர்ந்துவெண் பரிக ளெதிர்ந்தவென் றஞ்சிபசும்பரி யேழும் விசும்பிடை மறுகவிரிதிரை கொழிக்கும் பரிபுர நதியோய்மழுப்படைக் கடவுள் விழிக்குடை யாதசித்தசர் கோடி யொத்தகட் டழகசடைகொடு வேட்ட விடையுடை யவற்காப்புரஞ்சொற் றருளிய பரஞ்சுடர் மூர்த்திகுருகூர் விளங்க வருசட கோபர்வழுத்தவிர் நான்மறை விழுப்பொருள் பழுத்தவாக்கெனு மமுதந் தேக்கிய வொருநீபுவிமேற் சிற்சிலர் கவியுங் கொண்டனைஆங்கவை தமக்குப் பாங்கெனும் வளைகாய்ப்புளியென மகிழ்ந்தனை போலும்எளியேன் புன்கவி யேற்பதெத் திறமே.
பகிர்