பாடல் 44 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 44

மணங்கமிழ்பு வையுமயிலுந் தமாலக் காடும்வண்கிளியு நீலவெற்பு மடமான் கன்றும்இணங்குகட லுந்துகிருங் காரு மின்னும்யமுனையெனுந் திருநதியு மெகினப் பேடும்கணங்குழைய கோசலைதே வகிய சோதைகண்மணியும் பாவையும்போற் கமல வீட்டில்அணங்கரசி னுடன்குலவி யாடி ரூசலலங்கார மாயவரே யாடி ரூசல்.
பகிர்