பாடல் 43 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 43
தழைவிருந்த வனத்தர்பூமிசை குழைவிருந்தவ னத்தனைதந்தசுந்தர ராசகேசவர் தம்பதங்களி னினைவினார்இழைமருங்குடை வாணியுந்தொழ வியங்கொர்பாணரு ளாரவரிசைபுகுந்திடு காதின்மற்றவ ரிசைபுகாதுத காதுநீ'மழைதொடுங்கொடி மாடவீதியில் வந்ததேபிழை யிறையிவண்வரத்தைவிட்டனர் ஞானம்வந்து பரத்தைநச்சினர் வீணையும்பழையபேச்சுரை யுந்தொடுத்தனை புதியபேச்சுரை காணதுபாடினிக்கு மவட்கெழுந்தருள் பாடினிக்கு மணாளனே.