பாடல் 71 · ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் 71

அருள்விர வுருவ னம்பல வாண னாவடு தண்டுறை யரசே,பொருள்விர வொருவா னரசுமற் றரசு பூவர செனத்தெளி தூத,வெருள்விர வாத மறமுனு மரசின் மெய்த்திரு முகமுறு மதன்கண்,மருள்விர வாத குழைபல வுண்டே மறிக்குள காமெனின் வையே.
பகிர்