பாடல் 72 · ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் 72

வையகம் புகழு மாவடு துறைக்கண் மன்னிய வம்பல வாணன் -மலரடிக் கோதை மற்றவ னடியார் மார்பொடு தோளுறத் தழுவுஞ்,செய்யமற் றவன்முன் புனைந்தருள் கோதை சேய்ஞலூர்ப் பிள்ளை தோடழுவுஞ் -சேரல நாட்டுச் சிறந்தவோர் கோதை செறியு மே காலியுந் தழுவும்,வெய்யவெங் கோதை வீரர்கை யனைத்தும் வெளி வரு கோதைகஞ் சாறர்-மென்மகள் கோதை யாவையு நகுமா விரதியர் மார்பையுந் தழுவுங்,குய்யமொன் றின்றி யுரைத்தன மறவர் கோதைசீ ரற்றன்று தூத -குலவுநங் குலத்துக் கோதைவேட் டவர்கள் கோதையே யடைவது மெய்யே.
பகிர்