பாடல் 67 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 67 · தீநெறிவிலக்கல்
செல்லாத விவகார மேசெய்ய வொண்ணாது செய்ந்நன்றி கொல்லொணாதுதேவதா ப்ரார்த்தனைகள் செய்துகொண் டதனைச் செலுத்தா திருக்கொணாதுவல்லோர்கண் முன்னின்று வாதஞ்செ யொண்ணாது வாய்மையை மறுக்கொணாதுமாதாபி தாவொடுவிரோதஞ்செ யொண்ணாது வசைமொழி வழங்கொணாதுநல்லோ ருடன்கூடி வெகுகால மாய்வந்த நட்பைப் பிரிக்கொணாதுநம்பனடி யோரைப் பழிக்கொணா துலகத்து நன்னடை தவிர்க்கொணாதுகல்லாத முழுமடையர் சகவாச மாகாது காந்தநதி தீரமேவுங்கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.