பாடல் 2 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்
காசிக் கலம்பகம் 2
நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்கஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்கண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய்.நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமேபழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணைவழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாடஉரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளைவரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே.நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வதோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே.என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே.செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே.பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே.நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவைமணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே.முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே.உளதென விலதென வொருவரொ ரளவையின்அளவினி லளவிட லரியதொ ருருவினை.இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்அதுவல வெனுமெனி னெவருனை யறிபவர்.அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்எவனவ னிவனென வெதிர்தரு தகைமையை.அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறுநெறியல தொருவரு மறிவரு நிலைமையை.ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.வடவரை குழைய வளைத்தனை.மலைமகண் முலைக டிளைத்தனை.விடமமிர் தமர விளைத்தனை.விசயனொ டமர்செய் திளைத்தனை.வரிசிலை வதனை யெரித்தனை.மதகரி யுரிவை தரித்தனை.அருமறை தெரிய விரித்தனை.அலகில்பல் கலைக டெரித்தனை.அழல்வி ழித்தனை பவமொ ழித்தனை.ஆற ணிந்தனை மாற ணிந்தனை..மழுவ லத்தினை முழுந லத்தினை.மாந டத்தினை மானி டத்தினை..அலகி றந்தனை தலைசி றந்தனை..அருள்சு ரந்தனை இருடு ரந்தனை..உலக ளித்தனை தமிழ்தெ ளித்தனை.ஒன்று மாயினை பலவு மாயினை..அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே.பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே.அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே.இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே.எனவாங்குஉலகுசூற் கொண்ட தலைவியு நீயும்மலைபக வெறிந்த மழவிளங் குழவியைஅமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்கண்களிற் பருகியக் காமரு குழவிஎழுதாக் கிளவி யின்சுவை பழுத்தமழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்புன்மொழிக் கடுக்கொளப் புகட்டினன்இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே.