பாடல் 23 · குமரேச சதகம் · குருபாத தாசர்

குமரேச சதகம் 23 · வசையுறும் பேய்

கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்கடுகடுக் கின்றபேயும்கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்துகண்விழிக் காதபேயும்அடைவுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்தகப்பட்டுழன் றபேயும்ஆசைமனை யாளுக்கு நேசமாய் உண்மைமொழியானதை உரைத்தபேயும்இடரிலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்றும்எண்ணாது உரைத்தபேயும்இனியபரி தானத்தில் ஆசைகொண் டொருவற்கிடுக்கண்செய் திட்டபேயும்மடமனை யிருக்கப் பரத்தையைப் புணர்பேயும்வசைபெற்ற பேய்கள் அன்றோமயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடுமலைமேவு குமரேசனே.
பகிர்