பாடல் 51 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்
மதுரைக் கலம்பகம் 51
வாணிலாப் பரப்பு மகுடகோ டீர மறிபுனற் கங்கைநங் கைக்கும்வையமீன் றளித்த மரகதக் கொடிக்குன் வாமபா கமும்வழங் கினையாற்பூணுலாங் களபப் புணர்முலை யிவட்குன் பொற்புயம் வழங்கலை யெமர்போற்பொதுவினின் றாய்க்கு நடுவின்மை யிடையே புகுந்தவா றென்கொலோ புகலாய்தூணுலாம் பசும்பொற் றோரண முகப்பிற் சூளிகை நெற்றிநின் றிறங்குஞ்சுரிமுகக் குடக்கூன் வலம்புரிச் சங்கம் தோன்றலு மூன்றுநா ணிரம்பாநீணிலா வெனக்கொண் டணங்கனார் வளைக்கை நெட்டிதழ்க் கமலங்கண் முகிழ்க்குநீடுநான் மாடக் கூடலிற் பொலியு நிமலனே மதுரைநா யகனே