பாடல் 66 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 66 · அம்புலிப் பருவம்
எண்ணில்பல புவனப்பெருந் தட்டை யூடுருவியிவள்பெரும் புகழ் நெடுநிலாஎங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீயெள்ளளவு மொண்டுகொண்டுவெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்விழிக்கடை கொழித்த கருணைவெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளிவிளைப்பதும் பெற்றனை கொலாம்மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மைவைத்திடுஞ் சத்தியேகாண்மற்றொரு சுதந்திர நினைக்கென விலைகலைமதிக்கடவு ணீயுமுணர்வாய்அண்ணலங் களியானை யரசர்கோ மகளுடனம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.