பாடல் 69 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 69 · அம்புலிப் பருவம்

துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின்றொன்மரபு தழையவந்துதோன்றிடுங் கௌரியர் குலக்கொழுந்தைக்கண்டுதுணைவிழியு மனமுநின்றுகளிதூங்க வளவளாய் வாழாம லுண்ணமுதுகலையொடு மிழந்துவெறுமட்கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவு பூண்டொருகளங்கம்வைத் தாயிதுவலால்ஒளிதூங்கு தெளிவிசும் பினினின்னொ டொத்தவனொருத்தன் கரத்தின் வாரிஉண்டொதுக் கியமிச்சி நள்ளிருளி லள்ளியுண்டோ டுகின் றாயென் செய்தாய்அளிதூங்கு ஞிமிறெழுந் தார்க்குங் குழற்றிருவொடம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.
பகிர்