பாடல் 7 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்

மநுநீதி சதகம் 7 · அரசன் வினவுபொழுது விவகாரஞ் சொல்லக் தக்கவர் இவர்எனல்

இறையவன் சபைதனி லிருந்துவந் துப்பணிந்(து)எதிர்நிற்கு மவனைநோக்கி:"யாவனால் எவ்விடத்(து) எப்பொழுதில் ஏதினால்ஏற்படு விவாதமதுநீஉறுதியுடன் அஞ்சாது சொல்" என்று வினவுபொழு(து)உற்றகா ரியமுடையரேஉரைசெய்க வேண்டுமென நியமமிலை அவர்தமக்(கு)ஒத்துநிய மித்தமிகவுந்திறமுடைய தங்கை,தமை யன்தம்பி, நண்பினன்சேர்கிளைஞர் இவருத்தரஞ்செப்புதற்(கு) ஆகும்,எதிர் வாதிக்கும் இஃதென்றுதேர்ந்தமுநி வோர்மொழிவர்காண்;மறையவன் சுருதியாற் புகழ்கின்ற தேவனே!மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்) நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!
பகிர்