பாடல் 99 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்

மநுநீதி சதகம் 99 · அடித்தவரைத் தண்டிக்கும் இயல்பு

"இழிவான சேறு-சாம் பற்புழுதி-கோழை-மலம்எச்சிலோ(டு) உதிரம்-கொழுப்(பு)இவையுடலின் மீ(து)எறியின், நாற்பது பணத்துக்குள்ஏற்றபடி தண்டமாகும்;எழுவாதிகொண்(டு)உதிரம் இல்லா தடித்தவர்க்(கு)இருபதோ டொருபதுபணம்;இரத்தம்அது காணவும் தோல்அற அடிக்கினும்எழுபதொடு முப்பதுபணம்;பழுதாகவிழி-உதடு-செவி-கரம்-கால்அறும்படிசெய்யின் ஐந்து நூறுபணமும்;அவை துண்டுற அடிக்கின்,ஒ ராயிரம்பணமுமே தண்டம்" என்பார்;வழுவாத வர(ம்)மிக்க அருள்கின்ற சோதியே!மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!
பகிர்