பாடல் 37 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்

மறைசைக் கலம்பகம் 37

விடங்கமார் மறைசை யீசனீ பொறையன் வேண்டுவார் கருதுதற் கெளிய,னடைந்தநின் னருளும் விரைந்துவாய்த் திடுநின் னடியவர் தமக்கவர் பேறுந்,தொடர்ந்த வேட்கையினின் மேற்படப் பெறுவா சொற்றிடின் முழுது நின்னுடைமை,முடிந்தவித்திறத்தாற் பயன்குறித் தவர்க்கு மொழியினீ சரணெணத் தகுமே.
பகிர்