பாடல் 77 · சேக்கிழார் பிள்ளைத்தமிழ் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 77 · சிற்றிற் பருவம்
ஏத மகல வளவன்முன மேற்று குடிக ளொருநாற்பத்தெண்ணா யிரத்து ளொருகுடியென் றியம்பே மபய னமாத்தியருட்போத மருவு மொருவ னெனப் புகலேம் புராணஞ் செய்தாருட்பொலியு மொருவ னெனநவிலேம் புகலின் மூவ ருளுமொருவனாத மகன்ற பரமனென நவிலி னடைவ தடையுமெனனன்று தெரிந்தே மெங்கள்செய னயவா திருக்குந் திறமென்னேசீத வளத்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலேசெல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே.