பாடல் 3155 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஅரதைப்பெரும்பாழி · பாடல் 1 / 11
பண் · கொல்லி
திருஅரதைப்பெரும்பாழி · 3.30.1
பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.