பண் · கொல்லி
பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · கொல்லி
பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
கயலசே லகருங் கண்ணியர் நாடொறும்பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்பெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடைஆடல்சா லவ்வுடை யாரழ காகியபீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்பண்ணர்பா டலுடை யாரொரு பாகமும்பெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
புற்றர வம்புலித் தோலரைக் கோவணந்தற்றிர வில்நட மாடுவர் தாழ்தருசுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்பெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடிஇணையிலேற் றையுகந் தேறுவ ரும்மெரிகணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில்பிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
சரிவிலா வல்லரக் கன்தடந் தோள்தலைநெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்அரிவைபா கம்மமர்ந் தாரடி யாரொடும்பிரிவில்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்கரியமா லோடயன் காண்பரி தாகியபெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.
பாடலின் தனிப் பக்கம்
நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.
பாடலின் தனிப் பக்கம்