பண் · பஞ்சமம்
கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · பஞ்சமம்
கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
பாடலின் தனிப் பக்கம்
பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதாஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்சவாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.
பாடலின் தனிப் பக்கம்
சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்சஅந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.
பாடலின் தனிப் பக்கம்
நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.
பாடலின் தனிப் பக்கம்
ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்துகூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்லமானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
பாடலின் தனிப் பக்கம்
கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்லவார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.
பாடலின் தனிப் பக்கம்
கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.
பாடலின் தனிப் பக்கம்
இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலறநலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்தவலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
பாடலின் தனிப் பக்கம்
காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்தவாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
பாடலின் தனிப் பக்கம்
மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.
பாடலின் தனிப் பக்கம்
தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்னபண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.
பாடலின் தனிப் பக்கம்