பதிகம் 10 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருஇராமேச்சுரம்

Thiruiraamecchuram · 11 பாடல்கள் · 2935–2945

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 2935

பண் · காந்தாரபஞ்சமம்

அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமைமுலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனிஇலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 2936
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயறஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 2937
மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 2938
உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்தியவிரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 2939
ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 2940
அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கியஇணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 2941
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயனமுனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிடஇனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 2942
பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெடஅருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 2944
சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால்ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 2945
பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனைஇகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
பாடலின் தனிப் பக்கம்