பதிகம் 103 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருவலம்புரம்

Thiruvalamburam · 11 பாடல்கள் · 3945–3955

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3945

பண் · பழம்பஞ்சுரம்

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கிஇடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்துடியிடை யாளையோர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3946
கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகைதேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3947
நொய்யதோர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கிமெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழமையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்வைகலும் மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3948
ஊனம ராக்கை யுடம்புதன்னை யுணரின் பொருளன்றுதேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த அடிகள் இடம்போலும்வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3949
செற்றெறி யுந்திரை யார்கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்அற்றறி யாதன லாடுநட்ட மணியார் தடங்கண்ணிபெற்றறி வார்எரு தேறவல்ல பெருமான் இடம்போலும்வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3950
உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3951
புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்கவிரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி வேய்புரைதோள்அரைதரு பூந்துகில் ஆரணங்கை யமர்ந்தா ரிடம்போலும்வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3952
தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானைஒண்டணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றிமிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3953
தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானுந்தேர்வறி யாவகை யால்இகலித் திகைத்துத் திரிந்தேத்தப்பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த பெருமான் இடம்போலும்வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3954
காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேற்கொள்ளும்பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்டர் உள்ளுருகஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3955
நல்லியல் நான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.
பாடலின் தனிப் பக்கம்