பண் · சாதாரி
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லைவேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைவீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · சாதாரி
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லைவேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைவீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.
பாடலின் தனிப் பக்கம்
மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்லசந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதிஉந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைஎந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.
பாடலின் தனிப் பக்கம்
முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்திஎத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைமத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.
பாடலின் தனிப் பக்கம்
கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்திஎறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைமறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.
பாடலின் தனிப் பக்கம்
கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்திஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைபீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.
பாடலின் தனிப் பக்கம்
கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றிவாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்திஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைநீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.
பாடலின் தனிப் பக்கம்
குறிப்பு இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பாடலின் தனிப் பக்கம்நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்கவாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்திஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.
பாடலின் தனிப் பக்கம்
பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைஅருந்திறத் திருவரை யல்லல்கண் டோங்கிய அடிகளாரே.
பாடலின் தனிப் பக்கம்
கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்திஎட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.
பாடலின் தனிப் பக்கம்
தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.
பாடலின் தனிப் பக்கம்