பதிகம் 96 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருநெல்வெண்ணெய் - திருமுக்கால்

Thirunelvenney Thirumukkaal · 11 பாடல்கள் · 3875–3885

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3875

பண் · சாதாரி

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ் சொல்வணம் இடுவது சொல்லே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3876
நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் கச்சிள அரவசைத் தீரே கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர் அச்சமொ டருவினை யிலரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3877
நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரைவிரி கோவணத் தீரே அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு உரைவிரிப் போருயர்ந் தோரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3878
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய ஊர்மல்கி உறையவல் லீரே ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல் பார்மல்கு புகழவர் பண்பே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3879
நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய ஆடிளம் பாப்பசைத் தீரே ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு பாடுளம் உடையவர் பண்பே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3880
நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய பெற்றிகொள் பிறைநுத லீரே பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல் கற்றறி வோர்கள்தங் கடனே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3881
நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய கறையணி மிடறுடை யீரே கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர் உறைவதும் உம்மடிக் கீழே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3882
நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன் றரக்கனை யசைவுசெய் தீரே அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய் திருக்கவல் லாரிட ரிலரே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3883
நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன் றிருவரை யிடர்கள்செய் தீரே இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு பரவவல் லார்பழி யிலரே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3884
நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண்கெடுத் தீரே சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3885
நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை நலமல்கு ஞானசம் பந்தன் நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ் சொலமல்கு வார்துய ரிலரே.
பாடலின் தனிப் பக்கம்