பதிகம் 49 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

நமச்சிவாயத் திருப்பதிகம்

Namacchivaayath Thiruppadhigam · 11 பாடல்கள் · 3359–3369

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3359

பண் · கௌசிகம்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3360
நம்பு வாரவர் நாவி னவிற்றினால்வம்பு நாண்மலர் வார்மது வொப்பதுசெம்பொ னார்தில கம்முல குக்கெலாம்நம்பன் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3361
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்தக்க வானவ ராத்தகு விப்பதுநக்கன் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3362
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றிநயனன் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3363
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்நல்லார் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3364
மந்த ரம்மன பாவங்கள் மேவியபந்த னையவர் தாமும் பகர்வரேல்சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்நந்தி நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3365
நரக மேழ்புக நாடின ராயினும்உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்விரவி யேபுகு வித்திடு மென்பரால்வரதன் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3366
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகைநலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3367
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்பாதந் தான்முடி நேடிய பண்பராய்யாதுங் காண்பரி தாகி அலந்தவர்ஓதும் நாமம் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3368
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3369
நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
பாடலின் தனிப் பக்கம்