பதிகம் 124 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருக்குருகாவூர் - வெள்ளடை

Thirukkurugaavoor Velladai · 6 பாடல்கள் · 4178–4183

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 4178

பண் · அந்தாளிக்குறிஞ்சி

சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவியபெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 4179
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 4180
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்னநடைமட மங்கையோர் பாகம் நயந்துவிடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவியசடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 4181
வளங்கிளர் கங்கை மடவர லோடுகளம்பட ஆடுதிர் காடரங் காகவிளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவியஇளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 4182
சுரிகுழல் நல்ல துடியிடை யோடுபொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்கவிரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவியஎரிமழு வாட்படை எந்தை பிரானே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 4183
காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்மேவிய தண்பொழில் வெள்ளடை மேவியஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே.

குறிப்பு இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

பாடலின் தனிப் பக்கம்