பதிகம் 107 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருநாரையூர்

Thirunaaraiyoor · 11 பாடல்கள் · 3989–3999

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3989

பண் · பழம்பஞ்சுரம்

கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறிஉடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3990
விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றைபெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடிநண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3991
தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதிநாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3992
வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்தஅண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னைநண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3993
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றிநானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தைகோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3994
கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடிஅக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாகநக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3995
ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகிஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகிநாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3996
கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3997
பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3998
வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடைஉற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3999
பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாகவாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.
பாடலின் தனிப் பக்கம்