பதிகம் 24 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருக்கழுமலம்

Thirukkazhumalam · 11 பாடல்கள் · 3089–3099

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3089

பண் · கொல்லி

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3090
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3091
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3092
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமேநியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3093
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமேவிடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3094
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபலகற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3095
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமேநிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3096
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிடநெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவேகருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3097
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்அடியொடு முடியறி யாவழல் உருவினன்கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3098
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3099
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனைஅருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
பாடலின் தனிப் பக்கம்