பதிகம் 21 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருக்கருக்குடி

Thirukkarukkudi · 11 பாடல்கள் · 3056–3066

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3056

பண் · காந்தாரபஞ்சமம்

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளிநினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்கனைகடல் வையகந் தொழு கருக்குடிஅனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3057
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்காதியல் குழையினன் கருக்கு டியமர்ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3058
மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடிநஞ்சுறு திருமிட றுடைய நாதனார்அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவேவெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3059
ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்கானிடை யாடலான் பயில் கருக்குடிக்கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3060
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்கூடுவ ருலகிடை யையங் கொண்டொலிபாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3061
இன்புடை யாரிசை வீணை பூணராஎன்புடை யாரெழில் மேனி மேலெரிமுன்புடை யார்முத லேத்தும் அன்பருக்கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3062
காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்கோலமும் முடியர வணிந்த கொள்கையர்சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்சாலவும் இனிதவ ருடைய தன்மையே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 3063
எறிகடல் புடைதழு விலங்கை மன்னனைமுறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடிஅறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 3064
பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரிஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடிநாமன னினில்வர நினைதல் நன்மையே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 3065
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழிஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்காக்கிய அரனுறை யணிக ருக்குடிப்பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 3066
கானலில் விரைமலர் விம்மு காழியான்வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளிஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லியஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.
பாடலின் தனிப் பக்கம்