பதிகம் 100 / 125 · மூன்றாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருத்தோணிபுரம்

Thirutthoniburam · 7 பாடல்கள் · 3916–3922

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 3916

பண் · சாதாரி

கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளிஅரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 3917
கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்துசங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 3918
மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 3919
வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையெனஉள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரியமெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.

குறிப்பு இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள்மறைந்துபோயின.

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 3920
வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 3921
குண்டிகை பீலிதட் டோ டுநின்று கோசரங் கொள்ளியரும் மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந் தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 3922
தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையைமாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்னபாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.
பாடலின் தனிப் பக்கம்