பண் · பஞ்சமம்
கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · பஞ்சமம்
கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்சஎரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும் போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்தசடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்ததலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்துமுற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
பாடலின் தனிப் பக்கம்
தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்லபண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.
பாடலின் தனிப் பக்கம்