பாடல் 3500 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருப்பனந்தாள் · பாடல் 1 / 11
பண் · பஞ்சமம்
திருப்பனந்தாள் · 3.62.1
கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.