பாடல் 4847 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவீழிமிழலை - திருநேரிசை · பாடல் 1 / 10
திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.1
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்கீதத்திற் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வி யாளர்வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.