பாடல் 6757 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவொற்றியூர் · பாடல் 1 / 10
பண் · திருத்தாண்டகம்
திருவொற்றியூர் · 6.45.1
வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோ கனார்உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.