பாடல் 6860 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் · பாடல் 1 / 11
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.1
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றிஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றிகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.