பாடல் 6891 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவலம்புரம் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10
திருவலம்புரம் – திருத்தாண்டகம் · 6.58.1
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்றுகண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் கதநாகங் கையுடையார் காணீ ரன்றேபண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்லமண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.