பாடல் 6951 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவேகம்பம் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 11
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.64.1
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளைநீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.