பாடல் 6972 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருநாகேச்சரம் – திருத்தாண்டகம் · 6.66.1

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம்ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணாமாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்றதீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
பகிர்