பாடல் 7002 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.1

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத்தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானைநீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்தபாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
பகிர்