பாடல் 7096 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.1
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னைஅண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னைமுண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்றதண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.