பாடல் 7254 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · தனி - திருத்தாண்டகம் · பாடல் 1 / 11

தனி – திருத்தாண்டகம் · 6.96.1

ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மைவாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
பகிர்