பாடல் 7967 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவாவடுதுறை · பாடல் 1 / 5

திருவாவடுதுறை · 7.66.1

மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
பகிர்