நூற்பா 252 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 46 / 93
தொல்காப்பியம் 252 · உயிர்மயங்கியல்
திங்கள் முன் வரின் இக்கே சாரியை.
விளக்கம்
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தலின் எய்தியதன் மேற்
சிறப்பு விதி வகுத்தது.
இ - ள்: திங்கள்முன் வரின் இக்கே சாரியை – திங்களை உணரநின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவி வரின் வருஞ் சாரியை இக்குச் சாரியையாம்; எ - று.
எ - டு: ஆடிக்குக்கொண்டான், 2 சென்றான், தந்தான் போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு விரிக்க. (46)
2. நாட்பெயர்க்குக் கூறியதை இதற்குங் கொள்க.