பாடல் 10 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்

வடிவேல் சதகம் 10

தாலவிரை பெரிதெனினும் சிறிதான ஆலவிரைதருநிழல்க் கொப்பாகுமோ?தடவரையின் மீதுகற் கனமாயிருக்கினுஞ்சன்னமணிரத்தினமாமோ?ஓலமிடு கூகைமொழி கூவினும் குதலையான்உரைகிளிக் குரலாகுமோ?ஒருநாளு வாமட்டி நெட்டிமல ரானதுமுயல்முல்லைப் பூவாகுமோ?தூலமென உடலது பருத்துமே நரையராய்த்தோன்றினு மவர்பெரியரோ?சுத்தமும் ஞானமும் வித்தையும் புத்தியுந்தோற்றும்வாலிபர்பெரியராம்சேலெனும் விழிமாதர் மால்கொள்ளு மதனானசெங்கோடன் மனதினகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெயமுருக வடிவேலனே!
பகிர்