பாடல் 68 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 68 · அம்புலிப் பருவம்

கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டுங்கொடுங்களி றிடும்போர்வையான்குடிலகோ டீரத் திருந்துகொண் டந்நலார்கொய்தளிர்க் கைவருடவுஞ்செம்பஞ் சுறுத்தவும் பதைபதைத் தாரழற்சிகையெனக் கொப்புளிக்குஞ்சீறடிகள் கன்றிச் சிவந்திட செய்வதுந்திருவுளத் தடையாது பொற்றம்பஞ் சுமந்தீன்ற மானுட விலங்கின்தனிப்புதல்வனுக்கு வட்டத்தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தனடழைத்திடு கழைக் கரும்பொன்றம்பஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொடம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.
பகிர்