பாடல் 240 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 61 / 138

தசரதனை உரோமபதன் நகருக்கு அழைத்து வருதல்

கம்பராமாயணம் 240 · திருவவதாரப் படலம்

"யான் செய்த மா தவமோ? இவ் உலகம் செய்தவமோ? யாதோ? இங்கண்வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?" என,மனம் மகிழா, மணித் தேர் ஏற்றித்,தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்செழு நகரில் கொணர்ந்தான், தெவ்வர்ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்என்று உரைக்கும் உரவுத் தோளான்.
பகிர்