பாடல் 756 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 7 / 66
கம்பராமாயணம் 756 · கார்முகப் படலம்
'திண் நெடு மேருவைத் திரட்டிற்று ஒ? என்பார்;'வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து' என்பார்;'அண்ணல் வாள் அரவினுக்கு அரசன் ஓ?' என்பார்;'விண் இடு நெடிய வில் வீழ்ந்தது ஓ?' என்பார்.