பாடல் 35 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா

கஞ்சகிரி சித்தேசர் சதகம் 35 · இயற்கைச்செயலன்றி மாறுபடாதெனல்

தண்டவா ளத்துமீ தோடுகிற புகைவண்டி தரையின் மீதினிலோடுமோதரைமீதி லோடுகிற மரவண்டி நீள்கடற் றண்ணீரின் மீதோடுமோபுண்டரீ கம்பெரிய வாவியல் லாற்குறும் பொறையிலுற்பத்தியாமோ+ பொன்னிமடு தன்னிலுறு முதலையொடு மகரமிப் புவியிலுயிர் வாழுமோசூற்கொண்டமே கங்களைக் கண்டமயில் போலவான் கோழிநட னஞ்செய்யுமோ§கோகநக மிரவியைக் கண்டுமலர் தன்மைபோற் குமுதமல ரிதழ்விரியுமோகண்டீர வஞ்சிறிய தானுலு மும்மதக் கரியினங் கட்கஞ்சுமோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.
பகிர்