பாடல் 30 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்
காசிக் கலம்பகம் 30
வண்ண மேனி யரும்பு வனங்களேவாசம் வாச மரும்பு வனங்களேநண்ணு மாலய மாதவ ரங்கமேஞால மேழ்தரு மாதவ ரங்கமேதண்ணென் மாலை தருமருக் கொன்றையேதருவ தையர் தருமருக் கொன்றையேகண்ணி னிற்பர் மனத்திருக் கோயிலேகாசி யேயவர்க் கோர்திருக் கோயிலே.