பாடல் 32 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 32 · சப்பாணிப் பருவம்
உருப்பொலி மணிப்புன லுடுக்கைப் புவிக்கொடி யுரத்திற் குலாவுமாக்கள்-உருத்தொன்றை யாற்றினெதிர் பத்தாற்று வோமெனு முரைக்கிலக் கியமாகவொண்,குருப்பொலி விரற்செறி செறித்துப் பொலந்தொடிகள் கொழுவித் தனைப் பரிவினாற்-கொண்டாடு நின்றிருத் தாதைகிளை யொன்றை க் குழைத்துப் பணித்தவிறைவன்,திருப்பொலி கடுக்கைதழை தோட்குவடு பத்தையுஞ் செழுந்தமிழும் பாக்குழைத்துத்-திறல்கொண்ட நறுமலர்க் காந்தளங் கைத்தலஞ் சேந்தழகெறிப்ப விமையோர்,தருப்பொலி மலர்த்தொடைக் கூந்த லமு தாம்பாகை சப்பாணி கொட்டியருளே,தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குளத் தூரம்மைசப்பாணி கொட்டியருளே.