பாடல் 34 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 34 · சப்பாணிப் பருவம்
ஐவகைச் சுத்தியு மமைத்துவான் கம்பைநதி யருகன்பு பூப்பமலரால்-அஞ்சலி நிறைத்துமே னோக்கிமுக மதியினெதி ரல்கிய தெனக்குவிந்து,மெய்வகைத் துவாதசாந் தத்தலத் தானந்த வெள்ளப் பெருஞ்சோதியை-விரிமலர்த்தவிசாகி யேற்றுமுன் போலென்ன மீண்டுங் குவிந்திழிந்தாங்,குய்வகைச் சிவலிங்க நாப்பணா வாகித்தவ் வும்பனய னச்சுடரெதிர்-உறக்குவிந் தலர்விரைவு மானமுத் திரைகொடுத் துலவாது பூசைமுற்றுஞ்,சைவமுறை யாற்றுகைப் பங்கயஞ் சேப்பவொரு சப்பாணி கொட்டியருளே-தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குளத் தூரம்மை சப்பாணி கொட்டியருளே.